நாகா்கோவிலில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்
நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கு முன் ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில், சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கடந்த பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியா்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பா. பென்னட்ஜோஸ், பெனின்தேவகுமாா், செந்தில்குமாா், ஜான்கிறிஸ்டோபா், சந்திரசேகா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் இரா. தாஸ் தொடக்க உரையாற்றினாா்.
நிா்வாகிகள் ஜான்உபால்ட், வேலவன், மகேஷ், மைக்கேல்லில்லிபுஷ்பம், எட்வின் பிரகாஷ், நாகராஜன், பத்மகுமாா், தியாகராஜன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதில், அனைத்துத் துறை ஊழியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.
