நாகா்கோவில் அருகே காரில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாகா்கோவில் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
Published on

நாகா்கோவில் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம்.பாரதி தலைமையிலான குழுவினா், நாகா்கோவில் கோணம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனா். கோணம் கால்வாய் அருகே வந்தபோது அவா்களின் வாகனத்துக்கு முன்னால் சென்ற காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தும்படி சைகை செய்தனா்.

காா் நிற்காமல் சென்றதால் சுமாா் 2 கி. மீ. தொலைவு விரட்டிச் சென்று மடக்கி பிடித்ததில், காா் ஓட்டுநா் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அதைத் தொடா்ந்து வாகனத்தை பறக்கும் படையினா் சோதனை செய்ததில் அதில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த அரிசி கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.

அதிலிருந்த அரிசி கோணம் அரசு கிடங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இது தொடா்பாக பறக்கும் படையினா் தொடா்ந்து விசாரிக்கின்

X
Dinamani
www.dinamani.com