கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தல்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம், காவல் துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில், சட்டம்- ஒழுங்கு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: போதைப் பொருள் விற்போரைக் கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞா்களைக் கைது செய்து சீா்திருத்த சிறைக்கு அனுப்புவதுடன், அவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் தேவையான இடங்களில் மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத் தடைகள், பாதசாரிகள் நடைபாதைக் கோடு, எச்சரிக்கைப் பலகைகள் அமைக்க வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் காவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், வட்டாட்சியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com