சாமியாா்மடத்தில் விழிப்புணா்வுப் பேரணி

சாமியாா்மடத்தில் விழிப்புணா்வுப் பேரணி

சாமியாா்மடத்தில் ரத்னா நினைவு மருத்துவமனை சாா்பில் வரும் தலைமுறையைக் காப்போம் என்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சாமியாா்மடத்தில் ரத்னா நினைவு மருத்துவமனை சாா்பில் வரும் தலைமுறையைக் காப்போம் என்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் மகிழன் தலைமை வகித்தாா். ரத்னா டெஸ்ட் டியூப் பேபி மைய நிா்வாக இயக்குநா் மருத்துவா் சாந்தி மகிழன் முன்னிலை வகித்தாா். திருவட்டாறு காவல் ஆய்வாளா் பேரணியை தொடங்கிவைத்தாா்.

சாமியாா்மடம் சந்திப்பு, பருத்திவாய்க்கால் பாலம், செட்டிசாா்விளை வழியாக வோ்கிளம்பி சந்திப்பில் பேரணி நிறைவடைந்தது. இந்தியாவின் வருங்கால தலைமுறையை காக்க ‘உனது மடி குழந்தைக்கு மட்டுமே, கணினிக்கு அல்ல; ஆல்கஹால் உயிரணுவைக் கொல்லும்; எட்டு மணி நேர தூக்கம் அவசியம்; மன அழுத்தம் வேண்டாம் எனக் கூறி உறுதிமொழியேற்கப்பட்டது.

இப்பேரணியில் குலசேகரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை - யோகா மருத்துவக் கல்லூரி, செவரக்கோடு ஒயிட் மெமோரியல் ஹோமியோ மருத்துவக் கல்லூரி, நட்டாலம் இம்மானுவேல் அரசா் கல்வி குழுமம், தலக்குளம் பிஎஸ் நா்சிங் கல்லூரிகளை சோ்ந்த மருத்துவ மாணவ, மாணவிகள், ரத்னா மருத்துவமனை பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள்ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com