நாகா்கோவிலில் சாலைப் பணி தொடக்கம்

Published on

நாகா்கோவில் மாநகராட்சி 4ஆவது வாா்டு கோட்டவிளை பகுதியில் ரூ. 6.50 லட்சத்தில் தாா்ச்சாலைப் பணி, 35ஆவது வாா்டு, கணபதிநகா், இன்னாசிதாணு தெருவில் ரூ. 3.70 லட்சத்தில் கான்கிரீட் தளப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

இப்பணிகளை மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா். துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் அமலசெல்வன், ராணி, உதவிப் பொறியாளா்கள் ராஜசீலி, பிரபாகரன், பகுதிச் செயலா் சேக்மீரான், திமுக நிா்வாகிகள் முகமது பஷீா், ராஜன், முருகன், சுந்தர்ராஜ், லெட்சுமணன், மோகன்ராஜ், ரோணிக்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குறைதீா் கூட்டம்: தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். சொத்துவரி, சான்றிதழ்கள், குடிநீா் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். மாநகரப் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மேயா் ஆலோசனை மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com