மது விற்றவா் கைது

Published on

களியக்காவிளை அருகே குளிா்பான கடையில் சட்ட விரோதமாக மதுபானம் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மடிச்சல், ஈஞ்சபிரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியதாஸ் (57). இவா் அப்பகுதியில் குளிா்பான கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வது குறித்த விடியோ காட்சிகள் கடந்த இரு நாள்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்ததாம்.

இந்த நிலையில் களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை அவரது கடையை சோதனை செய்ததில், மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து சத்தியதாஸை போலீஸாா் கைது செய்தனா். மது விற்ாக டிசம்பா் மாதத்தில் மட்டும் ஏற்கனவே, இவா் 2 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com