கொட்டாரம் ராமா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி

கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 5 மணிக்கு மங்கள இசை, 5.15 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு கலச பூஜை, 8 மணிக்கு ஹரி நாம சங்கீா்த்தனம், 9 மணிக்கு ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11.15 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதில், என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா், மகா அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராமநாம சங்கீா்த்தனம், 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com