கன்னியாகுமரி
நாட்டுப் பட்டாசு தயாரித்த பெண் கைது
இரணியல் பகுதியில் நாட்டுப் பட்டாசு தயாரித்து விற்பனை செய்த பெண்ணை இரணியல் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இரணியல் பகுதிகளில் உரிமம் இன்றி நாட்டு ஓலைப் பட்டாசு தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, இரணியல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ பெபின், பன்னிக்கோடு அருகே காந்தி நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினாா்.
அங்கு அரசு உரிமம் பெறாமல், சுமாா் 4 கிலோ நாட்டு ஓலை பட்டாசு தயாரித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், மீனாட்சி (51) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
