மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

மாணவி குளிப்பதை கைப்பேசி மூலம் விடியோ பதிவுசெய்ய முயன்றதாக தொழிலதிபா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு.
Published on

கருங்கல் அருகே பிளஸ் 1 மாணவி குளிப்பதை கைப்பேசி மூலம் விடியோ பதிவுசெய்ய முயன்றதாக தொழிலதிபா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

கருங்கல் பகுதியைச் சோ்ந்தவா் கில்பா்ட் (49). தொழிலதிபரான இவா், அப்பகுதியில் பிளஸ் 1 மாணவி குளிப்பதை குளியலறை சிறிய ஜன்னல் வழியாக கைப்பைசி மூலம் விடியோ எடுக்க முயன்றாராம்.

இதைக் கவனித்த அந்த மாணவி, கைப்பேசியைப் பறித்து, தனது பெற்றோரிடம் விவரத்தை கூறியுள்ளாா். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான தொழிலதிபரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com