கன்னியாகுமரி
குளச்சலில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், புனித மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த் ஜோதி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சகாய ஸ்டீபன்ராஜ், குளச்சல் நகராட்சி ஆணையா் கண்ணியப்பன், தலைவா் நசீா், முகாம் ஒருங்கிணைப்பாளா் பவீனா, குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலா் பிரதீப்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
