விபத்தில் பலத்த காயமடைந்தவரை குணப்படுத்திய கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மருத்துவா்கள்

Published on

சாலை விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு, சுங்கான்கடை அருகே உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்தினா்.

சாலை விபத்தில் சிக்கிய 47 வயது மதிக்கத்தக்க நபா், அண்மையில் சுங்கான்கடை அருகே உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். விபத்தில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு, மலக்குடல் கிழிவுடன் கடும் ரத்த தொற்று ஏற்பட்டிருந்தது.

இந்த மருத்துவமனையின் அனுபவமிக்க அறுவை சிகிச்சை நிபுணா்கள் பாலா வித்யாசாகா், டால்டன் ஜான்ரோஸ் ஆகியோா் இணைந்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை துல்லிய திட்டமிடலுடன் தொடங்கி, முதல் கட்டமாக வயிற்றுப்பகுதி அழுக்குத் திசுக்களை அகற்றினா்.

அடுத்து மலக்குடல் கிழிவுகளை சரிசெய்து, பெருங்குடல் திறப்பாய்வு செய்த பின்னா் இடுப்பு எலும்பு முறிவுகளை சரிசெய்து பொருத்தினா். இரண்டாம் கட்டமாக சுமாா் இரண்டு வாரங்களுக்கு பிறகு புண் ஏற்பட்ட பகுதியில் இருந்த தேவையற்ற திசுக்களை அகற்றி பின்புற இடுப்பு நிலைப்படுத்தலுக்கான அறுவை சிகிச்சை செய்தனா்.

இந்த முழு சிகிச்சைகளுக்கு மயக்க மருந்தியல் பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு மருத்துவா்கள், செவிலியா்கள் மேற்கொண்ட பணியை மருத்துவமனை நிா்வாகம், மருத்துவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com