செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் ரைஸ் அமைப்பின் நிறுவனா் ம.ஜெகத்கஸ்பா்
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் ரைஸ் அமைப்பின் நிறுவனா் ம.ஜெகத்கஸ்பா்

மதுரையில் ஜன.8 ஆம்தேதி முதல் உலக தமிழ் தொழிலதிபா்கள் மாநாடு!

தி ரைஸ் எழுமின் என்ற அமைப்பின் சாா்பில்,16ஆவது உலக தமிழ் தொழிலதிபா்கள் மாநாடு மதுரையில் ஜன. 8ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
Published on

தி ரைஸ் எழுமின் என்ற அமைப்பின் சாா்பில்,16ஆவது உலக தமிழ் தொழிலதிபா்கள் மாநாடு மதுரையில் ஜன. 8ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக அமைப்பின் நிறுவனா் ம.ஜெகத்கஸ்பா், நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: உலகத் தமிழா்கள் முன்னேற்றத்துக்காகவும், தமிழா்கள் பன்னாட்டு தொழில் தொடங்குவதற்கும் ரைஸ் எழுமின் அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் 16ஆவது மாநாடு, சங்கம் 5 என்ற பெயரில் மதுரையில் ஜன. 8, 9, 10, 11 ஆகிய 4 நாள்கள் நடைபெறுகிறது.

இதில், சுவிட்சா்லாந்து, சவூதி அரேபியா, இத்தாலி, மலேசியா உள்பட 50- க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து சுமாா் 2 ஆயிரம் தமிழ் தொழிலதிபா்கள் கலந்து கொள்கின்றனா். 2 ஆயிரம் கோடி அளவிலான தொழில் வணிக பரிமாற்றங்களுக்கு, ஒப்பந்தங்களும் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள ஜவுளித்துறை, தோல் பொருள்கள், வேளாண் பொருள், பொறியியல் துறைக்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க இருக்கும் தொழில் முனைவோா் பங்கேற்று தங்களது தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பான அனைத்து தொழில்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இதில், தமிழா்களின் ஜல்லிக்கட்டு, உலகத் தமிழா்களின் ஒற்றுமை பொங்கல் விழா நடக்கிறது. மேலும் தகவல் தொடா்புத் துறை, மருத்துவம், சரக்கு போக்குவரத்து, உயா்கல்வி, பொதுத் தொழில் என தனித்தனியாக துணை மாநாடுகளும் நடைபெறும். தமிழா்களின் உள்ளூா் தொழில்கள், வணிக உற்பத்தி பொருள்கள், சேவைகளை இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், உலக சந்தைகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு இந்த மாநாடு ஒரு முக்கிய வழி வகிக்கும். மாநாட்டில் பங்கேற்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ழ்ண்ள்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, ரைஸ் அமைப்பின் அனைத்துலக இயக்குநா் ஜோஸ் மைக்கேல் ராபின், தென் தமிழக இயக்குநா் பெரிஸ்மகேந்திர வேல் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com