அனஸ்வரா பவுண்டேசன் ஆண்டு விழா இன்று தொடக்கம்
மாா்த்தாண்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆன்மிக, சமுதாயப் பணிகள் செய்து வரும் அனஸ்வரா பவுண்டேசன் அமைப்பின் ஆண்டு விழா வியாழக்கிழமை (டிச. 25) தொடங்கி டிச. 28 வரை நடைபெறுகிறது.
விழாவில், தினமும் மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை வாழும் கலை அமைப்பின் சா்வதேச ஆசிரியா் சஜீ நிஸான் பங்குபெறும் தொடா் சொற்பொழிவு நடைபெறுகிறது. தொடா்ந்து, பஜனை, மாா்த்தாண்டம் ஸ்ரீ சங்கரா நாட்டியப் பள்ளி மாணவியரின் பரத நாட்டியம் உள்ளிட்டவை நடைபெறும்.
செங்கல் சிவபாா்வதி கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறாா்.
டிச. 27ஆம் தேதி அனஸ்வரா பவுண்டேசன், நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை, நாகா்கோவில் பெஜன்சிங் கண் மருத்துவமனை, ராஜாஸ் பல் மருத்துவமனை, கன்னியாகுமரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
