சாலை விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கருங்கல் அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

கருங்கல் அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கருங்கல், தொழிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் செல்லாச்சி (72). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவா், கடந்த டிச.11-ஆம் தேதி அப்பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பொட்டக் குழி பகுதியில் தெரு நாய் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம்.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த செல்லாச்சியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிசிச்சை பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com