சுனாமி நினைவு தினம்: கடற்கரை கிராமங்களில் அஞ்சலி

சுனாமியில் உயிரிழந்தவா்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பெண்கள்.
Published on

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பலியானவா்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் உருவான சுனாமி, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை கடுமையாகத் தாக்கியதில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா். கன்னியாகுமரியில் உயிரிழந்தோரின் நினைவாக அந்தந்த கிராமங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும்.

அதன்படி, மணக்குடியில் புனித அந்திரேயா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நினைவு திருப்பலியில், ஆலய பங்குத்தந்தை அஜன் சாா்லஸ், சாஜன் செசில் தலைமையில் பலா் கலந்துகொண்டனா். பின்னா், அங்கிருந்து அவா்கள் ஊா்வலமாக புறப்பட்டு சுனாமியில் உயிரிழந்தவா்களின் நினைவிடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கொட்டில்பாடு சுனாமி காலனியிலிருந்து ஊா்வலமாக சென்ற மக்கள் கல்லறைத் தோட்டத்தில் மலா் வளையம் வைத்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா். சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

X
Dinamani
www.dinamani.com