கன்னியாகுமரி
சுனாமி நினைவு தினம்: கன்னியாகுமரியில் ஆட்சியா் மரியாதை
கன்னியாகுமரி சுனாமி பூங்கா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா.
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி சுனாமி நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா வெள்ளிக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் அருகே உள்ள சுனாமி பூங்கா நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா மலா்வளையம் வைத்தும், மலா்கள் தூவியும் மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், நகா்மன்ற ஆணையா் கண்மணி, அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்லின் சேகா், ராயப்பன், திமுக நிா்வாகிகள் சின்னமுட்டம் ஷ்யாம், ரூபின் உள்ளிட்டோா் பங்கேற்று மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

