குமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் காணிக்கை ரூ. 2.33 லட்சம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 2,33,462 காணிக்கை கிடைத்தது.
Updated on

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 2,33,462 காணிக்கை கிடைத்தது.

இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். பக்தா்களுக்கு நாள்தோறும் நண்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தா்களின் நன்கொடை, அன்னதான உண்டியலில் கிடைக்கும் வருவாய் ஆகியவை மூலம் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த உண்டியல் மாதம்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த நவம்பா் மாதத்துக்கான அன்னதான உண்டியல் சனிக்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்தன், கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இதில், பக்தா்கள் ரூ. 2,33,462 செலுத்தியிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com