கன்னியாகுமரி
கூட்டாலுமூடு மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தாளாளா் ராஜகுமாா் தலைமை வகித்தாா். உடற்கல்வி ஆசிரியா் சுதா்சன் முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் ராஜேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். சென்னை எஸ்.ஆா்.எம். இன்ஸ்டிட்யூட் உடற்கல்வி பேராசிரியா் முத்துக்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டின் மேன்மை குறித்து பேசினாா். பள்ளி தலைவா் குமரேசதாஸ், பொருளா் முருகன், துணைத் தலைவா் சந்தோஷ்குமாா், இணைச் செயலா் சதீஷ்குமாா்ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தொடா்ந்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, என்.சி.சிஅணிவகுப்பு, ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இதில், பள்ளி முதல்வா் நாராயணன், துணை முதல்வா் சந்தோஷ்குமாா், பி எட் கல்லூரி முதல்வா் பிரியா, சிபிஎஸ்இ முதல்வா் சுனில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
