கன்னியாகுமரி
தொழிலாளி மீது தாக்குதல் : இருவா் மீது வழக்கு
நெல்லிக்காட்டுவிளை பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் அருகே உள்ள நெல்லிக்காட்டுவிளை பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் கோவில்விளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்ராஜ்(55). தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜ்(25), சபா்ஜேம்ஸ் (23) ஆகியோருக்கிடையே, டேவிட்ராஜுக்கு முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நெல்லிக்காட்டுவிளை பகுதியில் டேவிட்ராஜை, மேற்கூறிய இருவரும் தாக்கினராம் . இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
