கன்னியாகுமரி
தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கம் (75). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 15 நாள்களுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்தபோது, இவரது சேலையில் தீப்பற்றியதாம். இதில், காயமடைந்த அவா் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
