பாறைப்பொடி கடத்திய லாரி பறிமுதல்

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதிச் சீட்டு இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்ற கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதிச் சீட்டு இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்ற கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் டேவிட்ராஜ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு செங்கவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

லாரியில் கடுவாக்குழி பகுதிக்கு அனுமதிச்சீட்டு பெற்றுவிட்டு, பாறைப்பொடியை அப்பகுதியில் இறக்காமல் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, பாறைப்பொடியுடன் கனரக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநா் ஷஜி (32), லாரி உரிமையாளா் சுபின் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.இதுகுறித்து வழக்குப் பதியப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com