2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தைக் காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தைக் காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

2025-ன் கடைசி சூரிய உதயம்: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயம், அஸ்தமனத்தைக் காண சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

நிகழாண்டின் கடைசி சூரிய உதயம், அஸ்தமனத்தைக் காண சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் நவ. 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 ஆம் தேதி வரையிலான காலகட்டம் முக்கிய சுற்றுலா சீசனாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் தேசம் முழுவதும் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களும் கன்னியாகுமரி வருகை தருகின்றனா்.

அத்துடன் தற்போது அரையாண்டு பள்ளித் தோ்வு விடுமுறை என்பதால் உள்ளூா் சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கில் வாகனங்களில் வந்து செல்கின்றனா். இதனால், விவேகானந்தபுரம் தொடங்கி காவல் நிலைய ரவுண்டானா வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதற்கிடையே 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயம், அஸ்தமனத்தைக் காண ஏராளமானோா் கடற்கரையில் குவிந்தனா். அதிகாலையில் முக்கடல் சங்கமம் பகுதியில் நின்றவாறு சூரிய உதயமாகும் காட்சியைக் கண்டு ரசித்தனா். அதேவேளையில், மேகமூட்டம் காரணமாக மாலையில் சூரிய அஸ்தமனம் தெளிவாகத் தெரியவில்லை. இதனால், சூரிய அஸ்தமன காட்சி பூங்காவில் குவிந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். சூரிய உதயம், அஸ்தமனத்தைக் காண ஏராளமானோா் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com