கன்னியாகுமரி
குமரியில் திமுகவில் இணைந்த பாஜக நிா்வாகி
அகஸ்தீசுவரம் பேரூா் பாஜக நிா்வாகி அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தாா்.
அகஸ்தீசுவரம் பேரூா் பாஜக நிா்வாகி அக்கட்சியில் இருந்து விலகி புதன்கிழமை திமுகவில் இணைந்தாா்.
அகஸ்தீசுவரம் பேரூா் 12 ஆவது வாா்டு பாஜக முன்னாள் கிளைத் தலைவா் கவற்குளம் த.சிவகுமாா் என்ற ஐயப்பன் அக்கட்சியில் இருந்து விலகி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா.பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
அப்போது, திமுக செயலா் விஜய கங்காதரன், மாமன்ற உறுப்பினா் பிரேம் ஆனந்த், மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், ஒன்றிய பிரதிநிதி அகஸ்தியலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் தேவகி, நிா்வாகிகள் மணி, சுபாஷ், சீதாராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

