தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கன்னியாகுமரியில் சித்த மருத்துவ 3 நாள் மாநாடு: இன்று தொடக்கம்

அகில இந்திய சித்த மருத்துவக் கழகம் சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ 3 நாள் மாநாடு வியாழக்கிழமை (ஜன. 23) தொடங்குகிறது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:24 am

Din

அகில இந்திய சித்த மருத்துவக் கழகம் சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் பாரம்பரிய சித்த மருத்துவ 3 நாள் மாநாடு வியாழக்கிழமை (ஜன. 23) தொடங்குகிறது.

மாநாட்டை அகில இந்திய சித்த மருத்துவக் கழக உறுப்பினா் ஜோஸ்பின் ராணி குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைக்கிறாா். அமைப்பின் தலைவா் கிறிஸ்டோபா் மாநாட்டுக் கொடியேற்றுகிறாா்.

மாநாட்டு குழுத் தலைவா் கே.எஸ். குமரேசன் வரவேற்றுப் பேசுகிறாா். கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் மூலிகைக் கண்காட்சியைத் திறந்துவைக்கிறாா்.

அகில இந்திய சித்த மருத்துவக் கழகச் செயலா் முருகேசன், துணைச் செயலா் ஜேக்கப் லீமாஸ், உறுப்பினா் யூஜின் நேவிஸ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். முன்னாள் தலைவா் ஜி. கிறிஸ்துராஜ் இலவச மருத்துவ முகாமைத் தொடக்கிவைக்கிறாா். இதையொட்டி, சித்த மருத்துவ நூல்கள் அடங்கிய புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

2ஆம் நாளான வெள்ளிக்கிழமை, இலவச பாரம்பரிய சித்த மருத்துவ முகாம், ஆயிரம் மருத்துவ மூலிகைகள் அடங்கிய கண்காட்சி நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கும் கண்காட்சி, மாலை 5 மணிவரை நடைபெறும்.

3ஆம் நாளான சனிக்கிழமை (ஜன. 25) மாநாட்டு மலரை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு வெளியிடுகிறாா். நிகழ்ச்சியில், விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, ஜே.ஜி. பிரின்ஸ், எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தி திட்டச் செயலா் வாசுதேவ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.