வாவுபலி பொருள்காட்சி கட்டண விவகாரம்: காவல்துறை விளக்கம்

Published on

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் காவல்துறை பாதுகாப்புக்கு, அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்த அறுவுறுத்தப்பட்டது என மாா்த்தாண்டம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்விவரம்: குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் பாதுகாப்பு பணிக்கு காவல்துறை சாா்பில் பணம் கேட்டதாக பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் நிா்ணயம் செய்து தமிழ்நாடு அரசு 4.3.2019இல் பிறப்பித்துள்ள அரசாணை, காவல் நிலை ஆணை எண். 380 மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அரசு வழங்கியுள்ள அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தனியாரால் நடத்தப்பட்ட வாவுபலி பொருள்காட்சி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அலுவலுக்கு காவல்துறை அரசு கணக்கில், அரசு கருவூலத்தில் அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்த அறுவுறுத்தப்பட்டது. நகராட்சி கட்டணம் செலுத்தாத நிலையிலும் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் நலன்கருதி தினந்தோறும் 20 காவலா்களை நியமித்து சட்டம்-ஒழுங்கை பேணி மக்கள் பாதுகாப்பை உறுதி செய்தது என்ற விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க காவல் துறை கடமைப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com