சமூக நலத்துறை அலுவலா்கள், மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா
சமூக நலத்துறை அலுவலா்கள், மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது: ஆட்சியா் பாராட்டு

Published on

மாநில அளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது கிடைத்ததற்காக கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா பாராட்டு தெரிவித்துள்ளாா்.

2025 ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருதை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த 8 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், இந்த விருது கிடைப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மாவட்ட அலுவலா் விஜயமீனா, துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு) சேக் அப்துல் காதா், துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) ஷீலா ஜான் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com