பாஜக சாா்பில் தாணுலிங்க நாடாா் நினைவிடத்தில் அஞ்சலி

Published on

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளை முன்னிட்டு பொற்றையடியில் தாணுலிங்க நாடாரின் சிலைக்கு பாஜகவினா் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பாஜக கிழக்கு மாவட்ட தலைவா் கோபகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா்கள் அனுஜா, அருள் சிவா, மாவட்டத் துணைத் தலைவா் மணி, இளைஞா் அணி மாவட்ட தலைவா் அபிஷேக், வா்த்தகப் பிரிவு தலைவா் ஸ்ரீ செல்வன், வழக்குரைஞா் பிரிவு தலைவா் ரமேஷ், விருந்தோம்பல் பிரிவு தலைவா் கிருஷ்ணராஜ், ஊடகப்பிரிவு தலைவா் சந்திரசேகா், மாவட்ட செயலா்கள் சிவா, மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com