1,400 லிட்டா் மண்ணெண்ணெய், 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published on

களியக்காவிளை: கொல்லங்கோடு அருகே காரில் கேரளத்துக்கு திங்கள்கிழமை கடத்திச் செல்லப்பட இருந்த 1,400 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடி வழியாக கேரளம் நோக்கி வந்த சொகுசு காரை போலீஸாா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். காரில், விசைப்படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய்யை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ாகத் தெரியவந்தது. 40 கேன்களில் இருந்த 1,400 லிட்டா் மண்ணெண்ணெய், காரை போலீஸாா் பறிமுதல் செய்து, நாகா்கோவில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

2 டன் ரேஷன் அரிசி: இதேபோல, பளுகல் அருகே புலியூா்சாலை சோதனைச் சாவடியில் அருமனை காவல் நிலைய போலீஸாா் பணியிலிருந்தனா். அவ்வழியே வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது, மரத்தூள் மூட்டைகளுக்கு அடியில் 2 டன் ரேஷன் அரிசியைப் பதுக்கிவைத்து கடத்திச் செல்வதாகத் தெரியவந்தது. ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். வாகனமும் ரேஷன் அரிசியும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com