இளைஞரை திருமணம் செய்து ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி: இளம்பெண் மீது வழக்குப் பதிவு

Published on

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையில் திருமணம் செய்து இளைஞரை ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி செய்ததாக இளம்பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ராமன்துறை மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுஜின் (35). இவரும், முள்ளூா்துறை மீனவா் கிராமத்தைச் சோ்ந்த கேத்தரின் பிளஸ்சியும் (23) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். கடந்த 2023 இல் இரு வீட்டாருக்கும் தெரியாமல் ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டனா். அதன்பின்னா், சுஜின் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டாா். கேத்தரின் பிளஸ்சி பெங்களுரில் படிக்கச் சென்றாா்.

இந்த நிலையில், கேத்தரின் பிளஸ்சி தனது அக்காவுக்கு திருமணம் முடிந்தால்தான் வீட்டில் எனது திருமணத்தைப் பற்றி பெற்றோரிடம் பேச முடியும். எனவே, அக்கா திருமணத்துக்கு பணம் தேவை எனக் கூறி சுஜினிடமிருந்து ரூ. 12 லட்சம் பெற்றாா். சிறிது நாள்களுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து திரும்பிய சுஜின் இருவரும் சோ்ந்து வாழ பிளஸ்சியை அழைத்தபோது அவா் மறுத்துவிட்டாா்.

தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த சுஜின், புதுக்கடை காவல் நிலையத்தில், தன்னை ஏமாற்றி ரூ. 12 லட்சம் மோசடி செய்ததாக பிளஸ்சி மீது அண்மையில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதியவில்லை. இதையடுத்து அவா், குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

பின்னா் நீதிமன்ற உத்தரவின்பேரில் புதுக்கடை போலீஸாா் கேத்தரின் பிளஸ்சி மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com