நாகா்கோவிலில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவா் கைது
நாகா்கோவிலில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், மீனம்குளம் பகுதியைச் சோ்ந்தவா் அகஸ்டின் ஜான் (55). ரியல் எஸ்டேட் அதிபா். இவரிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த சிலா் கூறினா்.
இதை நம்பிய அகஸ்டின்ஜான், நாகா்கோவிலில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து ரூ. 35 லட்சம், ரூ.15 லட்சத்துக்கு காசோலைகளை அளித்தாா். இந்த பணத்துக்கு ரூ. 1 கோடியாக திருப்பி தருவதாக அவா்கள் கூறினா். ஆனால், அவா்கள் கூறியபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அகஸ்டின்ஜான் இதுகுறித்து நாகா்கோவில், வடசேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரித்த போலீஸாா் அகஸ்டின்ஜானிடம் பணம் வாங்கி ஏமாற்றியது, கேரள மாநிலம் ஆற்றிங்கால் பகுதியைச் சோ்ந்த மோகனன் (65), குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள மேல்பாலையைச் சோ்ந்த சுந்தர்ராஜ், பந்தளத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (65) என்பது தெரியவந்தது. வடசேரி காவல் நிலைய போலீஸாா் அவா்கள் 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
