கன்னியாகுமரி
புதுக்கடை அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகேயுள்ள தேரிவிளை பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரைட்சன் (48). இவா் அரசுப் போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவருக்கும் இனயம், தேரிவிளை பகுதியைச் சோ்ந்த விஜயனுக்கும் (35) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை தேரிவிளை பகுதியில் சென்ற பிரைட்சனை விஜயன் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
