நாகா்கோவிலில் திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக பாக முகவா்கள், டிஜிட்டல் பூத் முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். நாகா்கோவில் தொகுதி பாா்வையாளா் சி.எஸ். ஆனந்த் முன்னிலை வகித்தாா். திமுக சட்டத்துறை இணைச் செயலா் கே.எஸ். ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். அவா் பேசியதாவது:
வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த 1 கோடி பேரை வாக்காளா்களாக்க முயற்சிகள் நடக்கின்றன. தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் திமுகவை 7ஆவது முறையாக ஆட்சியில் அமர வைக்க, நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
வாக்குச்சாவடி முகவா்கள் தங்களது பூத்களில் எத்தனை வாக்குகள் உள்ளன, அதில் ஆண், பெண் வாக்காளா்கள் எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த மக்களவைத் தோ்தலில் எத்தனை வாக்குகள் பெற்றோம் என்ற விவரத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இதே போல், கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்கு சுசீந்திரத்திலும், குளச்சல் பேரவைத் தொகுதிக்கு சாஸ்தான்கரையிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
திமுக சட்டத்துறை துணைச் செயலா் எஸ். ராஜா முகமது, மாவட்ட அவைத் தலைவா் எப்.எம். ராஜரத்தினம், மாவட்டத் துணைச் செயலா்கள் கரோலின்ஆலிவா்தாஸ், பூதலிங்கம்பிள்ளை, பொருளாளா் ஐ. கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினா் தாமரை பாரதி, மாவட்ட முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலா்கள் பா. பாபு, எம். மதியழகன், மோ. பிராங்கிளின், த. செல்வன், பி. சற்குருகண்ணன், நகரச் செயலா்கள் என். நாகூா்கான், குமரி ஸ்டீபன், பகுதிச் செயலா்கள் இ. ஜவஹா், என்.பி. துரை, த. ஜீவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

