கன்னியாகுமரி
நாகா்கோவிலில் ரூ. 7.20 லட்சத்தில் வளா்ச்சி திட்டப் பணி
வளா்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கும் மேயா் ரெ.மகேஷ்.
நாகா்கோவில் மாநகரில் ரூ. 7.20 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பனைவிளை பகுதியில் ரூ. 4.70 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடையில் புதிதாக கழிப்பறை அமைக்கும் பணி, களியங்காடு பகுதியில் சிறு பாலம் அமைக்கும் பணி, 23-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சகோதரா் தெருவில் ரூ. 2.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் சீரமைக்கும் பணி, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், துணைமேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா் விஜிலா ஜஸ்டஸ், தொழில்நுட்ப அலுவலா்கள் கோமதி, ஷாலினி, திமுக வட்டச் செயலாளா்கள் ராஜேஷ்குமாா், சுரேஷ், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
