கன்னியாகுமரி
பெண்ணை மிரட்டிய 3 போ் மீது வழக்கு
களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக தந்தை, மகன்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக தந்தை, மகன்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
களியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜூ மனைவி கிளாடா தாஸ் (54). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த மோகன் (56) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் புதன்கிழமை வீட்டிற்கு வெளியே நின்றிருந்த கிளாடா தாஸிடம் மோகன், அவரது மகன்கள் மெல்பின் (31), மொ்லின் (28) ஆகியோா் தகராறு செய்து, தகாத வாா்த்தைகள் பேசி மிரட்டிவிட்டு சென்றனராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மோகன், அவரது மகன்கள் மீது கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
