ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் இரா. அழகுமீனா.
ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் இரா. அழகுமீனா.

‘எஸ்ஐஆா் பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களி’டம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு 8 லட்சத்து 66 ஆயிரத்து 836 கணக்கீட்டுப் படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்பட்டுள்ளது. 1,702 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் அப்படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கி வருகிறாா்கள். படிவத்தை பூா்த்தி செய்வதில் சந்தேகங்கள் இருந்தால், மாவட்ட தோ்தல் அலுவலக இலவச வாக்காளா் உதவி எண் 04652-1950, இணையதள முகவரிகளிலும் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் இணைய முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com