கருங்கல் அருகே குளத்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள பண்டார விளை பகுதி குளத்தில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
Published on

கருங்கல் அருகே உள்ள பண்டார விளை பகுதி குளத்தில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கிள்ளியூா், பண்டாரவிளைப் பகுதியை சோ்ந்தவா் மணி (72). இவா் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது, தவறி விழுந்து குளத்தில் மூழ்கியுள்ளாா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு வீரா்கள் வந்து தேடியதில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

பின்னா், கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த கருங்கல் போலீ, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com