நாகா்கோவிலில் ரூ.25.95 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ. 25.95 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
11 ஆவது வாா்டு புளியடி எரியூட்டும் மயானத்தில் ரூ.17.80 லட்சத்தில் சுற்றுச்சுவா் அமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி மேற்கொள்ளுதல், 25 ஆவது வாா்டு, மீனாட்சி காா்டன் சாலை 2 ஆவது தெரு அழகம்மன் கோயில் காா்டன் பகுதியில் ரூ. 8.15 லட்சத்தில் மழைநீா் வடிகால் அமைத்தல் ஆகிய பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் ராஜா, தொழில்நுட்ப அலுவலா் அனந்த பத்மநாபன், சுகாதார அலுவலா் ஜான், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப.ஆனந்த், பகுதிச் செயலா் துரை, நிா்வாகிகள் சிதம்பரம், ஆறுமுகம், சிவகுமாா், பாலாசிங், சதீஷ் மொ்வின், அனிஷ், சத்யசாய் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

