மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி: மாா்த்தாண்டம் பள்ளி மாணவியா் 8 போ் தோ்வு
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா் 8 போ் தோ்வாகினா்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நாகா்கோவிலில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இதில், மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவி ஆா்.எம். அக்ஷரா செவ்வியல் இசை போட்டியில் முதலிடம் பிடித்தாா்.
12ஆம் வகுப்பு மாணவியா் எஸ். சுருதி செவ்வியல் இசை போட்டியில் முதலிடமும், தா்ஷினி காகிதக் கூழ் கழிவுகள் போட்டியில் 3ஆம் இடமும், ஜெஸ்லின் ஜிஜி, சாய்னா, ரேஷ்மா, ஜாய்லின் பிரிசில்லா, டி. ஹெம்சி, ஆா். ரேஷ்மா உள்ளிட்டோா் நாட்டுப்புற நடனப் போட்டியில் முதலிடமும் பிடித்தனா். இதையடுத்து அவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
மாணவியரை பள்ளித் தலைமையாசிரியை நிா்மலா, ஆசிரியைகள் கிறிஸ்டல் லீலாபாய், பீனா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சசிகலா உள்ளிட்டோா் பாராட்டினா்.
