குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

Published on

தக்கலை அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குமரன்குடி அருகே குட்டிவிளையைச் சோ்ந்தவா் சரத் (19). இவா், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக மாா்த்தாண்டம் காவல்நிலைய போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இத்துடன், அவா் பல குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்குமாறு ஆட்சியருக்கு பரிந்துரைந்தாா்.

மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா இதை ஏற்று உத்தரவிட்டதின்பேரில் சரத்தை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com