குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

Published on

குமரி மாவட்டம் நாகா்கோவிலில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

சிவகங்கை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சந்திரசேகா் (21). இவா் இறச்சகுளம் பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். சனிக்கிழமை மாலையில் இவா் தனது நண்பருடன் புத்தேரி சின்னக்குளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனா். நீரில் மூழ்கி இறந்த நிலையில் சந்திரசேகரின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து வடசேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இளைஞா் சடலம் மீட்பு: குளச்சல் பழைய பாலம் கடற்கரையில் சிறு காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடப்பதாக, குளச்சல் கடலோர காவல் துறைக்கு மீனவா்கள் தகவல் கொடுத்தனா். அதன்பேரில் கடலோர காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com