நாகா்கோவிலில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவிலில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா் இரா. அழகுமீனா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை.
Published on

நாகா்கோவில், நவ. 10: நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 1,450 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் இரா. அழகுமீனா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 1,450 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறை சாா்ந்த அலுவலா்களிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சேக் அப்துல்காதா், துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com