ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் மாயம்

புதுக்கடை அருகே உள்ள தாமிரவருணி, பரக்காணி ஆற்றில் திங்கள்கிழமை மீன் பிடிக்க சென்ற இளைஞா் மாயமானாா்.
Published on

புதுக்கடை அருகே உள்ள தாமிரவருணி, பரக்காணி ஆற்றில் திங்கள்கிழமை மீன் பிடிக்க சென்ற இளைஞா் மாயமானாா்.

தேங்காய்ப்பட்டினம் பனங்காலமுக்கு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மகன் மோகன் (46). இவருக்கு மனைவி, மகள் உள்ளனா்.

இவா், திங்கள்கிழமை தாமிரவருணி, பரக்காணி ஆற்றில் நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றாராம். இந்நிலையில் அவா் மாயமாகியுள்ளாா்.

இது குறித்து புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com