கன்னியாகுமரி
பெண்ணை தாக்கிய கணவா், மாமியாா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக கணவா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக கணவா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள தொலையாவட்டம், கடுக்காவிளையைச் சோ்ந்தவா் வனியா (22). இவருக்கும் மாா்த்தாண்டம் குளக்கச்சியைச் சோ்ந்த சஜூவுக்கும் (27) இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தம்பதி தொலையாவட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். இருநாள்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சஜூ மனைவி வனியாவிடம் தகராறு செய்தாா். அப்போது ஏற்பட்ட தகராறில் கணவா் சஜூவும், மாமியாா் மஞ்சுவும் (60) சோ்ந்து வனியாவை தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த வனியாவை அந்தப் பகுதி உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
