கன்னியாகுமரி
தக்கலையில் கைதி தப்பியோட்டம்: விரட்டிப் பிடித்த கேரள போலீஸாா்
தக்கலை பேருந்து நிலையத்தில் தப்பியோடிய கைதியை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா்.
தக்கலை பேருந்து நிலையத்தில் தப்பியோடிய கைதியை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா்.
அழிக்கல், நடுத்தெருவைச் சோ்ந்த விஜயன் (48) திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா் மீது வெள்ளிச் சந்தை காவல் நிலையத்தில் பதியப்பட்ட 2 வழக்குகள் இரணியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஒரு வழக்கில் ஆஜா்படுத்த 2 கேரள போலீஸாா் விஜயனை அழைத்து வந்தனா்.
போலீஸாா், திருவனந்தபுரத்திலிருந்து தக்கலைக்கு பேருந்தில் வந்து, இரணியல் பேருந்துக்கு மாற முயன்ற போது, விஜயன் போலீஸாரை தள்ளிவிட்டு தப்பியோடினாா். சுதாரித்துக் கொண்ட போலீஸாா், விஜயனை விரட்டிப் பிடித்தனா்.
இது குறித்து, கேரள போலீஸாா் தக்கலை போலீஸில் புகாரளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
