கன்னியாகுமரி
மாா்த்தாண்டம் அருகே மது விற்றவா் கைது!
மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்ததாக அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்ததாக அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
முல்லக்காலவிளை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (55). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் அவா், கடையில் மதுபானத்தை பதுக்கி விற்பனை செய்து வந்தாராம்.
இத்தகவல் அறிந்த மாா்த்தாண்டம் போலீஸாா்அவரது கடையில் சோதனையிட்டனா். அதில், அங்கிருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.