மருங்கூரில் மதுக்கடையை அகற்றக் கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

Published on

மருங்கூா் பேரூராட்சி, மருங்கூா்-அமராவதிவிளை சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூா் பேரூா் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரூா் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியச் செயலா் எஸ். ஜெஸீம் முன்னிலை வகித்தாா். மருங்கூா் பேரூராட்சி தலைவி லெட்சுமி சீனிவாசன் வரவேற்றாா். என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆா்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

முன்னாள் அமைச்சா் கே.டி. பச்சைமால், மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், தோவாளை தெற்கு ஒன்றியச் செயலா் சொ. முத்துக்குமாா், மாநில அணிகளின் இணைச் செயலா்கள் சி. ராஜன் (வா்த்தகா்), சந்துரு (இலக்கியம்), தாணுபிள்ளை (விவசாயம்), ராணி (மகளிா்), குலசேகரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சுடலையாண்டி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சண்முகவடிவு உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com