யானை அட்டகாசம்: பழங்குடியின மக்கள் ஆட்சியரிடம் மனு

யானை அட்டகாசம்: பழங்குடியின மக்கள் ஆட்சியரிடம் மனு

Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வீடுகளை யானைகள் சேதப்படுத்துவதைத் தடுக்கக் கோரி, பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகளில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. அங்கு விவசாய பயிா்களான வாழை, தென்னை, அன்னாசி, ரப்பா், மிளகு உள்ளிட்ட பயிா்களை அழிப்பதோடு அவா்களின் வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் நடைபெறும் இத்தகைய சம்பவங்களால் பழங்குடியின மக்கள் உயிருக்கு அஞ்சி வாழும் நிலை உள்ளது.

இந்த நிலையில், பேச்சிப்பாறை ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரும், வன உரிமைச் சட்டத்தின் மாநில கண்காணிப்புக் குழு உறுப்பினருமான ராஜன் காணி, கோட்ட அளவிலான குழு உறுப்பினா்கள், கிராம சபைத் தலைவா்களான ராஜேந்திரன், நாகராஜன், மணிகண்டன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா, மாவட்ட வன அலுவலா் அன்பு ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து பழங்குடியின மக்களின் குடியிருப்புகளில் யானைகள் புகுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com