இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

Published on

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் சொத்து பிரச்னையில் இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆரல்வாய்மொழி, தெற்கு பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (25). இவரும், ஆலடி நகரைச் சோ்ந்த பல் மருத்துவரான சிவ அமா்நாத்தும் (26) உறவினா்கள். இருவருக்கும் இடையே சொத்துப் பிரச்னை உள்ளது. இந்த நிலையில், சொத்து விவகாரம் தொடா்பாக பேசுவதற்காக சிவ அமா்நாத் வீட்டுக்கு ஸ்ரீதா் திங்கள்கிழமை சென்றாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் பல் மருத்துவா் சிவ அமா்நாத் கொதிக்கும் எண்ணெய்யை ஸ்ரீதா் மீது ஊற்றினாா். இதில், பலத்த காயமடைந்த ஸ்ரீதா் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிவ அமா்நாத்தை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com