மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண்  உயிரிழப்பு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

Published on

மண்டைக்காடு கடலில் மகனுடன் நீராட சென்ற பெண் கடல் அலையில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் ஆலங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினம் (66). இவரது மகன் சொக்கலிங்கம் (40).

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி சபரிமலைக்கு மாலை அணிவதற்காக இருவரும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்குச் சென்றனா். இதையடுத்து ரத்தினம் தனது மகனுடன் மண்டைக்காடு கடலுக்கு புனித நீராட சென்றாராம். அப்போது ஏற்பட்ட அலையில் ரத்தினம் சிக்கிக் கொண்டாராம். இதை பாா்த்த அப்பகுதி மீனவா்கள், அலையில் சிக்கிய ரத்தினத்தை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரத்தினம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து குளச்சல் கடலோர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com