பளுகல் அருகே நகை பறிப்பு வழக்கில் ஒருவா் கைது

பளுகல் அருகே நகை பறிப்பு வழக்கில் ஒருவா் கைது

பளுகல் அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியில் கடந்த 4 ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஜான் போஸ்கோ தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இச் சம்பவத்தில் கேரள மாநிலம் ஆரியநாடு பகுதியைச் சோ்ந்த விஜூ (46) என்ற எா்ணாகுளம் விஜூ என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை அவரை கைது செய்து, அவரிடமிருந்து 20 கிராம் தங்க நகைகளை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com